ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவெரா திருமகன் கடந்த 4ம் தேதி மாரடைப்பால் இறந்தார். அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நிலையில் இன்று திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி பிப்ரவரி மாதம் 27ம் தேதி(திங்கள்) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி 10ம் தேதி.
மார்ச் 2ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடைபெறும்.