ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிப்பதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். பிப்.5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் தவெகவின் பிரதான இலக்கு. தேர்தலில் வேறு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. ஆளும் கட்சிகள் ஜனநாயக மரபை பின்பற்றாமல் அதிகார பலத்துடன் இடைத்தேர்தலை சந்தித்து வருகின்றன. என்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.