Skip to content

ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்- பரபரப்பு

  • by Authour

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதில்கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணும் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு மாநிலத்தை சேர்ந்தவரின் வேட்புமனு ஏற்கப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.  47 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது.

அதேவேளை, வேறு மாநிலத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லாதவரின் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு  கிளம்பியது.   இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில்  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், அப்பெண்ணின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 46 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக  ஈரோடு மாநகராட்சி ஆணையரும்  இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியுமான  மணிஷ்  சங்கர் ராவ்  அறிவித்தார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தேர்தல்  நடத்தும் அதிகாரியான மணிஷ்  அதிரடியாக மாற்றப்பட்டார். தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்தது. புதிய தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓசூர் மாநகராட்சி ஆணையர்  ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார்.  அவர் இன்று  ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.