ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுகிறார். சந்திரகுமாரை ஆதரித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று மாலை ஈரோட்டில் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் வேட்பாளர் சந்திரகுமாருடன் ஈரோடு முக்கிய வீதிகளில் பிரசாரத்தை ஆரம்பித்து வைக்கிறார்.