ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது வாக்குச்சாவடிக்குள் இருந்த 138 பேருக்கு டோக்கன் வழங்கி, அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்த பின் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தலில் மொத்தம் 1,69,945 பேர் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்கள் 82,027 பேர், பெண்கள் 87,907 பேர், 17 மூன்றாம் பாலினத்தவர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 74.69 ஆகும் என்றார். வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.