Skip to content

ஈரோடு இடைத்தேர்தல்…. அதிமுக புறக்கணிப்பு..

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத் தேர்தல் வரவிருக்கிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இடைதேர்தல் போட்டி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் 40 நிமிடம் நடைபெ்றறது. இறுதியில்  ஈரோடு கிழக்கு இடைதேர்தலை புறக்கணித்துள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

error: Content is protected !!