ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிக்கலாமா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நடந்த பொதுத்தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருகிறது.
விக்கிரவாண்டி தேர்தல் போல ஈரோடு கிழக்கு தேர்தலையும் புறக்கணித்து விடலாம் என எடப்பாடி கருதுவதாகவும், இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்தை அறிய அவர் முடிவு செய்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலை குறித்து அறிவிக்கப்படும்.