ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் 11 மணிவரை 4 மணிநேரத்தில் 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 4 மணி நேரத்தில் 63,469 பேர் வாக்களித்துள்ளனர்.
காலை 7 மணி முதல் 9 மணிவரையிலான 2 மணி நேரத்தில் 10.10% வாக்குகள்(22,973 பேர்) பதிவான நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 17.79 % வாக்குகள் பதிவாகி உள்ளன.
மதியம் 1 மணி வரை, அதாவது 6 மணி நேரத்தில் 44.56% வாக்குப்பதிவு ஆகி உள்ளது. 1லட்சத்து ஆயிரத்து 392 பேர் வாக்களித்து உள்ளனர். இதில் ஆண்கள் 51ஆயிரம் பேர் வாக்களித்து உள்ளனர்.