ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது. விழாவினை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே பண்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். நேரு அண்ணா பூங்காவில் ரிபன் வெட்டி துவங்கி வைத்தார். ஏற்காட்டில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைப்பெறுகின்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னின் செல்வன் படகு, குழந்தைகளை கவரும் விதாமாக பல வகை கார்ட்டூன் பொம்மைகள் என பல வகையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த மலர் கண்காட்சியை மாலை 4 மணிக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர்கள் திறந்து வைத்தனர்.
இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் காலை முதலே ஏற்காட்டிற்கு படையெடுத்தனர். இந்த நிலையில் மலர் கண்காட்சி நடைப்பெறம் அண்ணா பூங்காவிற்கு முன் சுற்றுலா பயணிகள் கூடத்தொடங்கினர். இதனையடுத்து 6:40 மணியளவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளே சென்ற கோட்டின் முன்பு கட்டப்பட்ட ரிப்பனை வெட்டி மலர் கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டனர். இதையடுத்து ஏற்காடு கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.