திருச்சி அருகே பிராட்டியூரில் கோரையாற்றின் கரையில் உள்ள இரட்டை மலையில் ஒண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. மலையின் மேல் பகுதியை குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைக்குள் செல்ல ஒன்றரை அடி நீளம், அகலத்தில் சிறிய நுழைவு வாயில் உள்ளது. இந்த வழியாக படுத்து ஊர்ந்தபடி 6 அடி தூரம் சென்றால், மற்றொரு அறை இருக்கும். கோயில் திருவிழாவின்போது பயன்படுத்தப்படும் ஐம்பொன், இட்டாலியம் மற்றும் உலோகங்களால் ஆன சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் இந்த அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆடி திருவிழாவின்போது, சாமியிடம் உத்தரவு கேட்டு இவை வெளியே எடுக்கப்படும். உத்தரவு கிடைக்காமல் 3, 4 ஆண்டுகள்கூட இவற்றை எடுக்காமல் இருந்துள்ளனர். இந்த பொருட்களை நாகப்பாம்பு ஒன்று காவல் காப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆடி மாத பிறப்பை முன்னிட்டு 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரட்டைமலை சுரங்கத்தில் இருந்து சுவாமி சிலைகளை வெளியே எடுக்கும் வைபவம் இந்த ஆண்டு நடந்தது தற்போது இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இதற்கு என தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கோவிலின் ஒண்டி கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடனாக கெடா வெட்டி பக்தர்களுக்கு சாப்பாடு கெடா கறி குழம்பு பிரசாதாமாக வழங்கப்படுவது வழக்கம். முக்கிய திருநாட்களின் போதும் குறிப்பாக ஆடிமாதத்தில் நூற்றுக்கணக்கான கெடாக்கள் வெட்டப்படும் என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆடிமாசத்தின் போது சமையல் செய்யவோடு சாப்பிடவோ உணவுக்கூடங்கள் என்போதும் பிஸிதான். சமையல் கூடம் மற்றும் உணவுக்கூடம் என கோவில் நிர்வாகம் சார்பில் 3 மண்டபங்கள் உள்ளன. இந்த நிலையில் ஆடி மாத சீசனை பயன்படுத்தி சில தனியார்கள் ஷெட் அமைத்து அதனை உணவுக்கூடமாக வாடகைக்கு விட ஆரம்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் கூறுகையில் இரட்டை மலைக்கோவிலுக்கு வரும் ஆடி மாத கூட்டத்தை கருத்தில் கொண்டு ஷெட் கொட்கைகளுக்கு சில தனியார்கள் அமைத்து வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களிடம் அளவிற்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்கின்றனர். இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு தனியார் கொட்டகையை அமைத்து வசூல் செய்ய எந்த வித அனுமதியும் அளிக்கவில்லை என்கின்றனர்.