பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலனி தொழிற்சாலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.11.2023 அன்று திறந்துவைக்க உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலனி தொழிற்சாலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.11.2023 அன்று காணொளிக்காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை எறையூரில் மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் ஆகியோர் இன்று (27.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு வழிகாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் சிப்காட் மேலாண் இயக்குநர் மரு.கி.செந்தில் ராஜ் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 28.11.2022ஆம் நாள் பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவினை தொடங்கிவைத்து, கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனத்தின் காலனி தொழிற்சாலை தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டினார்கள். இந்நிலையில் காலனி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே ஆண்டில், அதேநாளில் காலனி தொழிற்சாலையினை தொடங்கி வைத்திடும் வகையில் 28.11.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காலனி உற்பத்தி தொழிற்சாலையினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கிவைக்க உள்ளார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் தொழில்பூங்காவில் காலனி தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இது தொடர்பாக நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.சியாமளாதேவிநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தொழிற்சாலைக்குள் நடைபெற்றுவரும் சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்குமாறும், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் வரும் மக்களுக்கு போதிய அடிப்படை
வசதிகள் செய்திடுமாறும், வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு இடவசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மங்களமேடு காவல் துணை கண்காணிப்பாளர் திரு,சீராளன், மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, வட்டாட்சியர்கள் சரவணன் (பெரம்பலூர்), மாயகிருஷ்ணன்(வேப்பந்தட்டை) மற்றும் பலர் உடனிருந்தனர்.