இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , இன்று பெரம்பலூர் மாவட்டம் உறையூர் சிப்காட் தொழில் பூங்காவை நேரில் ஆய்வு செய்தார்.வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் , போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின்போது சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் தரேஸ் அஹமது, மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28.11.2022 அன்று எறையூரில் 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை தரும் வகையில், ரூ.5,000 கோடி முதலீட்டில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து பீனிக்ஸ் கோத்தாரி
நிறுவனத்தின் சார்பில் காலணி பூங்கா அமைக்க கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் நடைபெற்று வரும் தொழிற்சாலைகளுக்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அ.லலிதா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சிப்காட் திட்ட அலுவலர் ஆர்.தமிழ்ச்செல்வி, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்),
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மரு. கருணாநிதி, மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.