குஜராத்தில் பாஜக வெற்றி பெற்று நாளை ஆட்சி அமைக்கிறது. இதற்கான விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பதவி ஏற்க உள்ள பூபேந்திர படேலுக்கு ஈபிஎஸ் எழுதி உள்ள கடிதத்தில்…..குஜராத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றி பெற்ற பாஜகவிற்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் பதவி பிராமண விழாவிற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன். விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தாலும், எனக்கு முக்கிய கடமை உள்ளதால் என்னால் கலந்து கொள்ள இயலாது. எனவே எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறேன். முதல்வராக தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.