மாத சம்பளக்காரர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த EPFO அமைப்பின் 2 நாள் கூட்டத்தின் முடிவில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கு பிஎப் டெபாசிட் தொகைக்கு 8.15 சதவீதம் அடிப்படையில் வட்டி அளிக்கப்பட உள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
மார்ச் 2022 இல் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான EPF கணக்கு வட்டி விகிதத்தை 8.10% என்று மத்திய அரசு நிர்ணயம் செய்த நிலையில், 2022-23 ஆம் நிதியாண்டுக்கு வெறும் 0.05 சதவீதம் அதிகரித்து 8.15 சதவீதம் வட்டி வருமானம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வட்டி விகிதம் பெரிய அளவில் உயர்த்தப்படும் என அனைத்து தரப்பு மாத சம்பளக்காரர்களும் எதிர்பார்த்த நிலையில் வெறும் 0.05 சதவீத உயர்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.