கோவை, ஆலந்துறை, நல்லூர்வயல் அருகே முட்டுத்துவயல் பகுதியில் நேற்று இரவு 11:30 மணிக்கு ஆடிட்டர் குரு என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை கண்டு அங்கு உள்ள நாய்கள் குரைக்க தொடங்கியது. அதனை துரத்திய அந்த யானை. அங்கு உணவைத் தேடிக் கொண்டு அங்கும், இங்கும் தேடி சென்றது. அப்பொழுது அங்கு நிறுத்தி இருந்த சைக்கிள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த தண்ணீர் கேன் ஆகியவற்றை யானை காலால் உதைத்து விட்டு அதன் அருகில் வைத்து இருந்த புண்ணாக்கு மூட்டையை காலால் மிதித்து ஃபுட்பால் ஆடி மூட்டையை உடைத்து ஒரு வாய் தின்று பார்த்தது. அதற்குப் அந்தப் புண்ணாக்கு பிடிக்கவில்லை போல், அதனால் துதிக்கையால் புண்ணாக்கை கீழே கொட்டியது, பிறகு அந்த வெறும் சாக்கு கவரை வாயில் கவ்விக் கொண்டு அங்கு இருந்து சென்றது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.