நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு அங்கு துணிகர கொள்ளை நடந்தது. இதில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் சென்று விட்டனர். சிலர் மர்மமான முறையில் இறந்தனர்.
2021 திமுக ஆட்சி வந்த நிலையில், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
இப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை நீதிமன்றத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இன்று உத்தரவிட்டது.
இந்த கொலை கொள்ளை நடந்த போது மாவட்ட எஸ்.பி.யாக இருந்த முரளி ரம்பா, சசிகலா உறவினர்கள் இளவரசி, சுதாகரன், மாவட்ட ஆட்சியர் சங்கர், அதிமுக பிரமுகர் சஜிவன் ஆகியோரையும் விசாரிக்க அனுமதி அளித்து ஐகோர்ட் இன்று அனுமதி வழங்கியது. எனவே இந்த வழக்கு சில நாட்களில் தீவிர மடையம் என எதிர்பார்க்கப்படுகிறது.