மலையாள பட உலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையின்படி பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க கேரள அரசு உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவையும் அமைத்துள்ளது. அந்த குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் குறித்து நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை ராதிகா சரத்குமார், இது குறித்து கருத்து தெரிவிக்கையில் கேரளாவில், கேரவனில் நடிககைள் உடைமாற்றும் இடத்தில் கூட ரகசிய கேமரா வைத்து அதை படம்பிடித்து ரசிப்பார்கள். இதை நான் ஒரு முறை பார்த்திருக்கிறேன் என்று கூறினார்.
இதற்காக மலையாள நடிகை பாக்யலட்சுமி கண்டனம் தெரிவித்ததுடன், நடிகை ராதிகா, இந்த தகவலை ஏன் அப்போதே தெரிவிக்கவில்லை. அவரும் பாலியல் சீண்டல்காரர்களுக்கு உடந்தையாக அமைதியாக இருந்தாரா என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் கேரளாவில் பாலியல் டார்ச்சர் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு நடிகை ராதிகாவிடமும் விசாரணை நடத்தும் என்று தெரிகிறது. இதற்காக அவர்கள் நேரில் சென்னை வரலாம். அல்லது போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தலாம் என தெரிகிறது.