இங்கிலாந்தில் நேற்று பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் வரும் ஜூலை 4 ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக பிரதமர் சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் இதுவாகும். கடந்த அக்டோபர் 2022 ல் நடந்த வாக்கெடுப்புக்குப் பிறகு அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பிரதமரானார். வரும் ஜூலையில் நடைபெற உள்ள இங்கிலாந்து தேர்தல் என்பது,2016 ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெறவுள்ள மூன்றாவது பொதுத் தேர்தலாகும்.