இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்களும் நடந்து வருகிறது. அப்படி தான் பிரிட்டனிலும், கடந்த சில நாட்களாக மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. இதற்கிடையே பாலஸ்தீன போராட்டம் குறித்து பிரிட்டன் உள் துறை துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கூறிய கருத்துகள் சர்ச்சையானது. பலரும் அவருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முதலில் அமைச்சரவையில் இருந்து அவரை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நீக்க மறுத்தார். இருப்பினும், கண்டனங்கள் அதிகரித்த நிலையில், வேறு வழியில்லாமல் இப்போது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.