இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே 3-1க்கு என்ற நிலையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தொடங்கியது. டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிராலி, டக்கெட் இறங்கினர். கிராலி 79, டக்கெட் 27 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இந்திய வீரர் குல்தீப் யாதவ் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் பெவிலியன் திரும்பினர். குல்தீப் மட்டும் 5 விக்கெட் எடுத்தார். பிற்பகல் 2.45 மணி அளவில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்திருந்தது. அஸ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பிறகு இங்கிலாந்து வீரர்களால் ரன் எடுக்க முடியவில்லை. 218 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது அஸ்வினுக்கு 100வது டெஸ்ட் என்பதால் காலையில் அவர் கவுரவிக்கப்பட்டார்.100 என எழுதப்பட்ட தொப்பியை அவருக்கு கேப்டன் ரோகித் வழங்கினார். அவர் மைதானத்திற்குள் அவரும்போது சக வீரர்கள் கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர். இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவுக்கும் இது 100வது டெஸ்ட் ஆகும்.