தமிழகத்தில் அண்ணா பல்கலைகழத்துடன் 450க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பி.இ., — பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், ஆன்லைன் வழியில் இந்த கவுன்சிலிங் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்குக்கு, 2.09 லட்சம் பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்க உள்ளது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினர், 3,743 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் விளையாட்டு பிரிவினர், 2,112; மாற்றுத் திறனாளிகள், 408; முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், 1,223 பேர் அடங்குவர். அடுத்தாக அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துள்ள மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 387 பேர் பங்கேற்க உள்ளனர். மீதமுள்ள மாணவர்களுக்கு வரும், 25 முதல், 27ம் தேதி வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்பின், வரும், 29ம் தேதி முதல் செப்.,3 வரை பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. விபரங்களை, https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று ஆரம்பம்..
- by Authour
