தமிழ்நாடு முழுவதும் இன்று மின் சிக்கன சேமிப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் டிசம்பர் 14 முதல் 20 வரை மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்படுகிறது. மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் விழிப்புணர் பேரணி நடைபெற்றது.
பேரணியை கரூர் மின்சார மேற்பார்வை பொறியாளர் அசோக் குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார் 80 அடி சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி தின்னப்பா தியேட்டர், பேருந்து நிலையம்
ரவுண்டானா வழியாக மின்வாரிய அலுவலகத்தில் நிறைவடைந்தது. இப் பேரணியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம் , தரமான மின் சாதன பொருட்களை பயன்படுத்துவோம், தேவையில்லாத நேரங்களில் மின்சாரத்தை வீணாக பயன்படுத்துவதை தவிர்ப்போம், என்பதை வலியுறுத்தி கையில் பதாய்கள் இயங்கி எவ்வாறு நூறுக்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.