கரூர் மாநகரை ஒட்டி அமைந்துள்ள வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை நீதிமன்ற உத்தரவின் பெயரில் மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.
நிலத்தை கையகப்படுத்தி, கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்திக்க கரூர் வந்தார். இதையொட்டி வெண்ணைமலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர்ஒன்று கூடினர்.
இதையடுத்து கரூர் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள சீமானை சந்திக்க பொதுமக்கள் வெண்ணைமலையில் இருந்து நடந்து செல்ல முற்பட்டனர். அப்போது நடந்து செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்கள், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தனியார் விடுதியில் தங்கியுள்ள சீமானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மண்மங்கலம் வட்டாட்சியர் குணசேகரன் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின்னர் பாதிக்கப்பட்ட நபர்களை தனியார் விடுதியில் நேரில் 10 நபர்கள் மட்டும் பார்த்துக் வரலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.