போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 14-ம் தேதி, மராட்டிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிஸ்னோய் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்ததாக பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கும் கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக சத்திய கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்து. இதுகுறித்து சத்ரிய கர்னி சேனாவின் தேசியத் தலைவர் ராஜ் செகாவத், “லாரன்ஸ் பிஷ்னோயை கொல்லும் எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ரூ.1,11,11,111 வெகுமதியாக வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
முன்னதாக ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னிசேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொகாமடி கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.