நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காலி சிலிண்டர் உருளைகளை ஏற்றிக்கொண்டு அதில் எரிவாயு நிரப்ப கோவை மாவட்டம் கினத்துகடவு பகுதிக்கு செல்வதற்காக லாரி ஒன்று குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வழியாக வந்து கொண்டு இருந்தது. லாரியை தியாகராஜன் என்பவர் ஓட்டி வந்தார் மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் பர்லியாறு அருகே வந்த போது லாரியின் பின்பக்கர சக்கரத்தில்
திடீரென தீ பற்றி எரியத் துவங்கியது. இதனை கன்ட ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்திய நிலையில் சக்கரத்தின் பகுதி முழுவதும் எரியத் துவங்கியது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தபட்ட நிலையில் தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்த பட்டு கோத்தகிரி சாலை வழியாக மாற்றி விடபட்டது.