திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணி அளவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சலை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அலுவலகத்தில் சோதனை செய்தனர். மாலை 6 மணி வரை நடந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. எனவே அது வீண் வதந்தி என்பது தெரியவந்தது. இந்த மின்னஞ்சலை அனுப்பி வெடிகுண்டு வதந்தி பரப்பிய நபர் யார் என்பது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை
- by Authour
