கோவை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல், சடையாண்டி கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி அருகே குட்டிகளுடன் நேற்று புகுந்த 5 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளே முகாமிட்டு இருந்தது. இது குறித்து இன்று மதுக்கரை வனத் துறையினருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வனத் துறையினர் இரண்டு குழுக்களாக செயல்பட்டு காட்டு யானையை கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே விரட்டினர். பின்னர் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை செல்லாமல் இருக்க அதனை கண்காணித்து பின்னர் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர்.
இருந்த போதிலும் வனப் பகுதியில் இருந்து மீண்டும் காட்டு யானை வரக் கூடும் என்பதால் அப்பகுதியில் வனத் துறையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.