கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. கோடை காலம் என்பதால் யானைகள் தண்ணீர் குடிக்க அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். தற்போது சாரல் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் காட்டு யானைகள் சாரல் மழையில் நனைந்த படியே தொட்டிகளில் தண்ணீர் அருந்தின.
அங்கு குட்டியானைகளுடன் வந்த 5க்கும் மேற்பட்ட யானைகள் அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி சென்றன.அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
