மத்திய வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவுக்கு (WCCB) கிடைத்த திருச்சி நகரப்பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவில் திருச்சிராப்பள்ளி வனச்சரக அலுவலர் உயிரின பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதை கண்டறிய திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் பகுதியில் திருச்சி திண்டுக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு நான்கு சக்கர வாகனமான Maruthi Suzuki EECO Star (TN 48 BZ 6779) நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தில் ஓட்டுநருடன் ஐந்து நபர்கள் இருந்தார்கள். அதில் இருந்த ஒருவரிடம் கைப்பையில் இரண்டு யானைத் தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர்கள் யானைத் தந்தங்களை விற்பனைக்காக திருச்சிக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.
ஐந்து நபர்களையும் திருச்சிராப்பள்ளி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை செய்த போது ராமசாமி,திருப்பதி ,ஞானசேகரன்,சுப்பிரமணி கார்த்திக் 1972 வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் பிரிவு 44-ன்படி வனவிலங்கு பொருட்களை உரிய அனுமதி இல்லாமல் யானை தந்தம் வைத்திருந்து விற்பனைக்கு தடை செய்யப்பட்டதை மீறி விற்பனைக்கு முயன்றுள்ளனர். 5 பேரையும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.