கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த அப்பர் பாரளை ஸ்டேட் பகுதியில் இரவு ஒரு மணி அளவில் ஒற்றைக்காட்டு அணை அட்டகாசம் செய்துள்ளது.
அப்பகுதியில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கடையை உடைத்து அதில் உள்ள கதவு ஜன்னல் மற்றும் கட்டிடங்களை தாக்கி விட்டு சென்றுள்ளது. அன்று கடையில் பொருள்கள் இல்லாத காரணத்தினால் ஆக்ரோஷம் கொண்டு தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வால்பாறை பகுதியில் ஆங்காங்கே குழுக்களாக பிரிந்து சுமார் 200க்கும் மேற்பட்ட யானைகள் உலா வருகிறது. இரவு நேரங்களில் அப்பகுதியில் உலா வருவதால் பள்ளி மற்றும் சத்துணவுக்கூடங்கள் மகளிர் சுய உதவிக்குழு தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை இடிப்பதை இதற்கு
வாடிக்கையாகிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வர வேண்டிய அவல நிலை உள்ளது.
இதனை அறிந்த வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குடியிருப்பு பகுதிக்கு வரவண்ணம் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.