கேரளப் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது பரம்பிக்குளம் அணை.இந்த அணை கேரள வனப்பகுதியை சுற்றி உள்ளதால் அவ்வப்போது வனத்தில் உள்ள புலி, யானை ,சிறுத்தை, குரங்கு, ஓநாய் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அணைக்கு வந்து செல்வது வழக்கம்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பெரும்பாலும் விலங்குகள் அணைப்பகுதி அருகே காணப்படுகிறது. 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 51.25 அடியாக உள்ளது சுமார் 70 சதவீதத்திற்க மேல் நீர் நிறைந்து காணப்படும் பரம்பிக்குளம் அணையில் ஒற்றைக்காட்டு யானை நேற்று மதியம் நீச்சல் அடித்தபடி அக்கறையிலிருந்து இக்கரைக்கு வந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.