கரூரில், யானை தந்தம் விற்பனை செய்ய தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் உட்பட ஆறு பேர் கைது. சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ யானை தந்தம் பறிமுதல்.
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு
விடுதியில், கரூர் மாவட்ட வன அலுவலர் சண்முகம் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் தண்டபாணி தலைமையில் வனத்துறை பணியாளர்கள் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது அந்த தனியார் விடுதியில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் 25, நந்து 25, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி 45, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மதியழகன் 46, செந்தில்குமார் 49, முத்துக்குமார் 47, என ஆறு பேரும் யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக தங்கியிருந்துள்ளனர்.
பெண் உட்பட ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 3 அரை கிலோ யானை தந்தத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.