திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது.
இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் சுற்றுச்சூழலின் இயற்கை அரணாக உள்ளது என அதன்
முக்கியத்துவத்தை குறித்தும், பாதுகாப்பை உணர்த்தும் விதமாக 100கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் மாவட்ட வன அலுவலர் அவர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. யானைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மூலம் கேக் வெட்கப்பட்டு, பின் யானைகளுக்கு ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.