நீலகிரி மாவட்டம் கூடலூர் எம்ஜிஆர் நகர் நர்த்தகி தியேட்டர் முன்புறம் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். அதிகளவில் வாகனங்கள் செல்லும். இந்த சாலையில் இன்று, காட்டு யானை ஒன்று வலம் வந்தது. யானையை கண்டதும் அந்த வழியாக வந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. இறைச்சி கடைகளுக்கு கோழிகள் ஏற்றி வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவரும், அதில் இருந்தவர்களும் தலைதெறிக்க ஓடினர். இவர்கள் ஓடிய ஒரு சில நொடிகளில் அந்த யானை, தந்தத்தால் முட்டி கோழிகள் ஏற்றி வந்த வாகனத்தை தூக்க முயன்றது. பின்னர் யானை சென்று விட்டது. யானையின் இந்த திடீர் நடமாட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
