தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களையும் நிவர்த்தி செய்யும் வகையில், வரும் 05.04.2025 (சனிக்கிழமை) அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெறப்படும் அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாளை மறுதினம் தமிழகம் முழுவதிலும் மின்துறை குறைதீர் கூட்டம்..
- by Authour
