Skip to content
Home » தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு…… ஒப்பிட்டு பார்க்க தமிழக அரசு வேண்டுகோள்

தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு…… ஒப்பிட்டு பார்க்க தமிழக அரசு வேண்டுகோள்

  • by Authour

நாட்டிலேயே தமிழகத்தில்தான் குறைவாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

“வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையில் இந்தியமாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்தஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் 2 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் யூனிட்வரை இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 300யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. என்றாலும், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் மற்ற மாநிலங்கள் போல் உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரியாககணக்கிடும்போது கட்டணம் ரூ.113ஆகும். இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது மும்பை 100 யூனிட்டுக்கு ரூ.643 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, டாடா நிர்வாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் ரூ.524, மும்பை பிரிகான் எலக்ட்ரிசிடி மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.488. ராஜஸ்தான் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.833, மராட்டிய மாநகராட்சி கட்டணம் ரூ.668, உத்திர பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.6,93, பீகாரில் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.684, மேற்கு வங்க மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.654, கர்நாடக மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.631, மத்திய பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்கட்டணம் ரூ.6.43, ஒரிசா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.4.26, சத்தீஸ்கர் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.431இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது.

இதனை திராவிட முன்னேற்ற கழகமோ, தமிழ்நாடு அரசோ, குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்திய மாநிலங்களில் நிலவும் மின்சார கட்டணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்துஅரவிந்த் வாரியர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல்-அமைச்சர் ஏழை, எளியோரின் நல வாழ்வில் செலுத்திவரும் அக்கறையும் கரிசனமும் வெள்ளிடைமலையாக விளங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *