Skip to content
Home » எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் டாஸ்மாக் கடை அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் முன்விரோதம் காரணமா அல்லது தொழில் போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கல்லடி தெருவை சேர்ந்தவர் பெரியப்பிள்ளை (எ) ரவி. இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபுரந்தான் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்ற இவரை, மர்ம நபர்கள் வழிமறித்து அறிவாளால் தலை மற்றும் கழுத்து, வயிற்றிலும் வெட்டியதில் பெரியபிள்ளை ரவி (எ) ரவிக்குமார்

சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை முன் விரோதம் காரணமாக நடந்ததா ? அல்லது தொழில் போட்டி காரணமாக நடந்ததா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் ரவியை வெட்டி கொலை செய்தவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முந்திரி தோப்பில் தஞ்சம் புகுந்து தலைமறைவாக உள்ள தமிழரசனை விக்கிரமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர். எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!