Skip to content
Home » மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை ஆதி திராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் மணிகண்டன் (47) எலக்ட்ரீசியன். இவர் கடந்த 14ம் தேதி இரவு செல்வநாயகர் காந்தி தெரு பகுதியில் ஒரு வீட்டில் மின் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கியது. இதில் தலை மற்றும் கால் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மீனா அளித்த புகாரின் பேரில் செசன் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.