திருச்சி திருவெறும்பூர் அருகே மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த மின்சார வாரிய கேங்மன்திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மணப்பாறை மயிலம்பட்டி சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ் (40). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள கைலாசபுரம் துணை மின்சார வாரியத்தில் கேங் மேனாக வேலை பார்த்து வருகிறார்
இந்த நிலையில் நேற்று அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கி கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஆரோக்கிய சகாயராஜ் மீது மின்சாரம் தாக்கியது இதில் மின் கம்பத்திலிருந்து ஆரோக்கிய சகாயராஜ் தூக்கி வீசப்பட்டார் உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.