அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காடு கிராமத்தில் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பன். மனைவி வளர்மதி (45). இவர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே, பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, கட்டப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் இன்று வளர்மதி, குளித்து கொண்டுயிருக்கும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் அக்கிராம மக்களிடையே சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு லட்சத்தில் குடிநீர் தோட்டி அமைக்கப்பட்டும், தரமாக இல்லாததால், அதனை பயன்படுத்தாமல் நேரிடையாக குழாய் அமைத்தது இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தளவாய் ஊராட்சி எழுத்தர் வரதராஜனிடம் கேட்ட போது, வளர்மதி குளித்த இடத்தில், பாசிப் பிடித்துயிருந்ததால், வழுக்கி விட்டதால், தண்ணீர் குழாயை பிடித்த போது, மின்சாரம் தாக்கியதாக கூறினார்.
புதிதாக அமைக்கப்பட்ட தொட்டியில் நீர் கசிவு இல்லை என்றும், பொது மக்களே தொட்டியில் தண்ணீர் வராததால் நேரிடையாகவே பயன்படுத்தி வந்தனர் எனவும், இனிமேல் தொட்டியை சீர் செய்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.