வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரைகடந்தது. புயல் கரையை கடக்க தொடங்கியபோது, பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. சில இடங்களில் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேற்கண்ட இடங்களில் இன்று பிற்பகலுக்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் ஊழியர்கள் இந்த பகுதிகளில் ஆய்வு செய்தபின் மின்விநியோகம் வழங்கப்படும். மின்னகத்திற்கு நேற்று 26,251 புகார்கள் வந்தன. இந்த புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.