கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் அமைந்துள்ள தனியார் பேக்கரிக்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்த வாடிக்கையாளர் ஒருவர் டீ சாப்பிட வந்துள்ளார். வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்ற சிறிது நேரத்தில், எலக்ட்ரிக் பைக்கின் பின்பகுதியில் அமைந்துள்ள பேட்டரியில் எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. தீ பரவி பல அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறிய நிலையில், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எலக்ட்ரிக்கல் வாகனத்தில் இருந்த பேட்டரியை அப்புறப்படுத்தினர். வாகனத்தில் இருந்த பேட்டரி தீ பற்றிய எப்படி? வாடிக்கையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். தற்பொழுது வெயில் காலம் தொடங்கியதால் எலக்ட்ரிக்கல் வாகனங்கள் தீப்பிடித்து எறிவது தொடர்கதையாக நடந்து வருகிறது.