அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாரணவாசி, அரசு உயர்நிலைப்பள்ளி வாரணவாசி மற்றும் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறும் முகாமினை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
01.01.2024 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2024-ஆம் ஆண்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய சிறப்பு முகாம்கள் கடந்த 04.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 2 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் திருமானூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாரணவாசி, அரசு உயர்நிலைப்பள்ளி வாரணவாசி மற்றும் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்முகாமானது அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 306 வாக்குச்சாவடி மையங்களிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 290 வாக்குச்சாவடி மையங்களிலும் என மொத்தம் 596 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெறுகிறது.
மேலும், இன்றையதினம் வழங்க இயலாத வாக்காளர்களுக்கு நாளை 26.11.2023 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்கண்ட நாளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு தங்களுக்கான படிவங்ளை பூர்த்தி செய்து வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். இந்நிகழ்வில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.