Skip to content
Home » வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 தொடர்பாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஹரிஹரன் (ஆணையர் நில சீர்திருத்தம்) தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் நேற்று நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 தொடர்பாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஹரிஹரன் தெரிவித்ததாவது:-

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டமும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டமும் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் அவர்களால் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் அவர்கள் 18 முதல் 19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்த்திட உரிய நடவடிக்கை எடுத்திடவும் இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிட உரிய நடவடிக்கையினை துரித படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் 100% தூய வாக்காளர் பட்டியல் என்ற இலக்கினை அடைந்திட உதவிடுமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் மற்றும் அலுவலர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்காதவர்கள் 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்தி 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும் இடம் பெயர்ந்த / இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கிடவும் பிழைத்திருத்தம் வண்ண புகைப்படம் இடம் பெயரச் செய்திடவும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திடவும் விண்ணப்பிக்கலாம் எனவும் வாக்குசாவடிக்கு சென்று உரிய படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாத 18 யது நிரம்பிய இளம் வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணைய தளம் மற்றும் Voters Help line என்ற Mobile App மூலமாகவும் வாக்கர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

முன்னதாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஹரிஹரன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர்தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களான குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லாரி மற்றும் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லாரி முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!