திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள். தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மேலும், 23 அணி நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமையாக கருதிக் கொள்ளாமல், களத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, பொன்முடி, பொருளாளர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ் இளங்கோவன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளை கவனிக்க ஒவ்வொரு அணிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் மகளிர் அணிக்கு பொறுப்பாளராக கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டார்.