சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அறிக்கை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தப்படும்.
சிறுவாணி அணையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
மாநில அரசுகளிடம் கருத்து கேட்டு கவர்னர்களை நியமிக்க வேண்டும்.
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சென்னையில் நடத்த வேண்டும்.
நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெற வேண்டும்.
ரயில் பயண சலுகை மீண்டும் வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரிக்க வேண்டும். தினக்கூலியாக ரூ.450 வழங்க வேண்டும்.
மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்கும் நிதிப்பகிர்வை 75:25 என நிர்ணயிக்க வேண்டும்.
பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தடுத்து நிறுத்தப்படும்.
நீட்டுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை கொண்டு வர வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
பெட்ரோல் ,டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்.
குற்ற வழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்.
விவசாயிகளுக்கு ஆண்டு ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
மேகதாது அணை திட்டம் தடுத்து நிறுத்தப்படும்.
இதுபோல பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.