நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி Mood Of the Nation 2024 என்ற பெயரில் இந்தியா டூடே சார்பில் நாடு முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மொத்தம் 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் இந்தியா’ கூட்டணி தான் அனைத்து இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளிலும் இந்தியா’ கூட்டணி தான் வெல்லும் என இந்த சர்வே தெரிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி தேனி தவிர 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனை ஒப்பிடும்போது இந்த முறை திமுக கூட்டணி என்பது அனைத்து தொகுதிகளிலும் வென்று அசத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இரண்டாக பிரிந்துள்ள அதிமுக கட்சியும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புதிய கூட்டணி அமைத்து களமிறங்குவதில் ஆர்வம் காட்டி வரும் அண்ணாமலை தலைமயிலான பாஜகவுக்கும் ஒரு இடங்கள் கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவு என்பது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு பெரிய ஷாக்கை வழங்கும் வகையில் உள்ளது.