சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வாக்குஎண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பின்னடைவை சந்தித்துள்ளார். சர்தார்புராதொகுதியில் போட்டியிட்ட முதல்வர் அசோக் கெலாட் பாஜக வேட்பாளர் டாக்டர் மகேந்திர ரத்தோரை விட குறைவான வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். அதேபோல் தெலங்கானா சந்திரசேகர் ராவ் மொத்தம் 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார். இந்த 2 தொகுதிகளிலும் சந்திசேகர் ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார். இதில் கஜ்வெல் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் எட்டலா ராஜேந்தர் சந்திரசேகர் ராவ் அதிக வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். அதேபோல் காமரெட்டியில் காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி சந்திரசேகர் ராவை எதிர்த்து போட்டியிட்டார். அவர் முன்னிலையில் உள்ளார்.
தற்போதைய நிலவரம்..
மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 230/230 (மெஜாரிட்டி-116)
பாஜக – 151
காங்கிரஸ் – 77
பகுஜன் – 00
மற்றவை – 02
தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 119/119 (மெஜாரிட்டி-60)
காங்கிரஸ் – 68
பிஆர்எஸ் – 39
பாஜக – 08
மற்ற-04
ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 199/199 (மெஜாரிட்டி-101)
பாஜக-103
காங்-81
பகுஜன்-00
மற்ற-15
சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 89/90 (மெஜாரிட்டி-46)
காங்-52
பாஜக-38
ஜெசிசி-00
மற்ற-00