சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல வந்த சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,” பொன்முடி பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்க்க கவர்னர் டில்லி போனாரா என்று தெரியவில்லை. அப்படி செய்து இருக்க வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே டில்லியில் திட்டமிட்டப்படி பணிகள் இருப்பதால் சென்று இருக்கலாம். டில்லி சென்று வந்த பின் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என நம்புகிறேன்” என்றார்.
மேலும், “மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்த பின் பதவி பிரமாணம் செய்து வைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. முதலமைச்சர் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்து வைக்கிறாரோ அவருக்கு ஆளுநர் முறைப்படி செய்து வைப்பார்கள். இதில் எதுவும் பிரச்சினை இருக்காது என நம்புகிறேன். தேர்தல் தேதி அறிவித்தாலும் பதவி பிரமாணம் செய்து வைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது. சட்ட ரீதியான நடவடிக்கை எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்” எனக் கூறினார்.