நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் போலீசாரும் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை பணிகளுக்கும் தேர்தல் செலவின கண்காணிப்பிற்கும் 90 குழுக்கள் கோவை
மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுக்களுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்?, அவர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் என்னென்ன? கட்சியினரையும்
பொதுமக்களையும் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தான பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தனி துணை ஆட்சியர் சுரேஷ், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குழு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இன்று தேர்தல் பறக்கும் படை மாப்பிள்ளை தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் நாளை தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் ஒன்பதாம் தேதி மண்டல குழு அலுவலர்களுக்கும் 11ஆம் தேதி காவல் அதிகாரிகள் உள்ளிட்டுவர்க்கும் 15ஆம் தேதி மைக்ரோ அப்சர்வர்கள் வீடியோகிராபர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.